இங்கிலாந்து பிரதமர் ரஷியாவுக்குள் நுழைய தடை

Boris-Johnson.webp

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது, மேலும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இதை எரதிர்த்து, ரஷ்யா பல்வேறு நாட்டு தலைவர்கள் ரஷ்யா வர தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பிரிட்டன் பிரதமர் ஜான்சசன் மற்றும்  வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், கன்சர்வேட்டிவ் எம்.பி. மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே மற்றும் 9 மூத்த அரசியல்வாதிகள் – பெரும்பாலும் அமைச்சரவை உறுப்பினர்கள் – ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட லண்டனின் கட்டுப்பாடற்ற தகவல் மற்றும் அரசியல் பிரச்சாரம், நம் நாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கழுத்தை நெரித்தல் ஆகியவை அதன் முடிவுக்கு காரணம் என தெரிவித்து உள்ளது.

scroll to top