உலகில் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் இங்கிலாந்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார். அந்த நோயாளி கிழக்கு லண்டனின் பட்டிங்டன் அருகே மருத்துவ விடுதியில் ஒமிக்ரான் தொற்றால் சிகிச்சை பெற்று நேற்று இறந்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘‘ஒமிக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இந்த வைரசால் மிகப்பெரிய அலை உருவாகவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியைத் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் தற்போது 3,000க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் வைரசின் தினசரி தொற்று ஒவ்வொரு 3 நாட்களிலும் இரட்டிப்பாகி வருவதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கூறி உள்ளார்.