ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை; 28 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது

கோவை போக்குவரத்து துறை இணை ஆணையர் மத்திய அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றி வருகின்றனர். கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறை இணை ஆணையர் உமாசக்தி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத லட்சக்கணக்கான 28 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்

scroll to top