மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ஊர்மெச்சி குளத்தில் ஆர். ஆர் .கேர் கிளினிக் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரத்தினவேல், இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலச் செயலாளர் தியாகராஜன், சுகாதார நலப்பணி துணை இயக்குனர் அர்ஜுன் குமார், மாநகர நல அலுவலர் வினோத் குமார், இந்திய மருத்துவ கவுன்சில் கௌரவ நிதித்துறை செயலர் அழகு வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.பரவை பேரூராட்சி மன்ற தலைவர் கலாமீனாராஜா குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர் .ஆர். கேர் கிளினிக் மருத்துவமனை திறப்பு விழா: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் துவக்கி வைத்தார்.
