மதுரை மாவட்டம் தென் மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் மதுரை யானைக்கல் மேம்பாலம். தற்பொழுது, கீழ்பகுதியில் கம்பிகள் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித் துறையிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்
சாட்டுகின்றனர். தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பாலத்தில் கான்கிரீட் கம்பி வெளியே வந்துள்ளது.
வாகன ஓட்டுனர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெயர்ந்துள்ள கான்கிரீட் கம்பியை சரி செய்து வாகன ஓட்டிகளின் நலன் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என இப் பகுதி மக்களின் ஆவலாகும்.