மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது இங்கிருந்து மதுரை திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் பஸ்கள் இயக்கப்படுகிறது இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானில் இருந்து மதுரை குருவித்துறை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் காலை மாலை வேளையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்கிறது ஆனால் இந்தப் பகுதிகளில் இயக்கும் பேருந்துகளில் போதிய பராமரிப்பு பணியை செய்யாததால் அடிக்கடி பழுதாகி இடையில் நிற்பதாகவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிப்பதாகவும் பலர் குற்றம்சாட்டுகின்றனர் இன்று காலை மதுரையில் இருந்து குருவித்துறை சென்ற பேருந்தில் படிக்கட்டில் கீழ்ப்பகுதி பெயர்ந்து விழக்கூடிய நிலையில் இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்தவாறு வந்தனர் திருவேடகம் அருகே வந்தவுடன் பொதுமக்கள் பஸ்சை நிறுத்தி வேறு பஸ்சில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறு நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆகையால் திருவேடகம் பேருந்து நிலையத்தில் பஸ்சை நிறுத்தி பின்னால் வந்த பேருந்தில் பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் பயணிப்பதாக கூறுகின்றனர் குறிப்பாக படிக்கட்டு பகுதி பஸ்சின் உள் பகுதியில் உள்ள சீட் பகுதி போன்றவை போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் எந்நேரமும் விபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் ஆகையால் இது போன்ற பஸ்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தாமல் பராமரிப்பு பணி செய்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர் மேலும் இதுகுறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கூறும்போது அரசு போக்குவரத்து பணிமனைகளில் உள்ள அதிகாரிகள் விரைவு போக்குவரத்து பஸ்களை எடுத்து சிட்டி பஸ்ஸாக இயக்க கூறுவதாகவும் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் கூறுகிறார்கள் மேலும் போதிய ஆட்கள் இல்லாததால் தினம்தோறும் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் இருப்பதாகவும் கூறுகின்றனர் ஆகையால் போதிய ஆட்களை நியமித்து குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.
ஆபத்தான நிலையில் அரசு பேருந்து படிகட்டுகள்
