ஆன்லைன் காதலியிடம் நகை செல்போன் பறிப்பு

App-Ban.jpg

மதுரை மார்ச் 28 ஆன்லைன் காதலியிடம் தங்க நகை செல்போன் பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் வத்திராயிருப்பு அல்லா கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகள் விஜயலட்சுமி32. இவரிடம் ஆன்லைனில் நண்பராக வாலிபர் பழகினார்.பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர்.அவர் விஜயலட்சுமியை மாட்டுத்தாவணி எதிரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அழைத்தார் .அங்கு அவருக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாக கூறி நம்ப வைத்தார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் .இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

scroll to top