ஆனையூர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

WhatsApp-Image-2021-11-24-at-5.42.37-PM.jpeg

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:-
இலங்கைத் தமிழர்களை உறவுமுறை சொல்லி அழைக்கக்கூடிய வகையில் ஏறத்தாழ 25 ஆண்டு காலமாக ஒரு குடும்பத்தைப் போல வேறுபாடின்றி வாழ்ந்து வருகிறார்கள். இலங்கைத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் உதவுகின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான திட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். இத்திட்டத்தின் மூலமாக இலங்கைத் தமிழர்களின் வீடுகளை பராமரிக்கும் பணி மட்டும் அல்லாமல் உடை, சமையல் பாத்திரங்கள் எரிவாயு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி இருக்கின்றோம்.

மேலும், கிழக்கு தொகுதியிலே ஆனையூரிலும் மேலூர் தொகுதியிலே திருவாதவூரிலும் மற்றும் திருமங்கலம் தொகுதியிலே உச்சப்பட்டியிலும் வசிக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியில் மேம்படையச் செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொன்றாக சிந்தித்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி வருகின்றார்கள்.

10 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகுதான் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தைப்போல, கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் அனைத்து வீடுகளுக்கும் வழங்கக்கூடிய வகையிலே துவக்கப்பட்டு உள்ளன. பருவ மழையினால் பல்வேறு இடங்களில் சாலைகள் பழுது ஏற்பட்டுள்ளன. பழுதடைந்துள்ள சாலைகளை ஒரு மாத காலத்திற்குள்ளாக சீரமைக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற கூட்டத்தொடரில் முகாம்களில் இருக்கக்கூடியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிப்போம் என்று அறிவிப்பு செய்தார்கள். எண்ணம், கருத்து, கொள்கை மற்றும் தத்துவம் என்ற அடிப்படையில் செயல்பட்டால், எவ்வாறு இருக்கும் என்று அன்றைக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனால் , தமிழ்நாடு முதலமைச்சர், தொடர்ச்சியாக இலங்கை தமிழர்களுக்கு உணவு, உடை, எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை வழங்கிட ஆணையிட்டதன் படி, 25 கோப்புகளில் நிதி அமைச்சர் என்ற முறையில் கையெழுத்திடும் போது இத்திட்டங்கள் எவ்வாறு சாத்தியமாகும் என்று எண்ணிணேன்.

ஆனால், இன்றைக்கு இந் நிகழ்வில் கலந்து கொண்டதால்தான் இத்திட்டம் முழுமையாக செயல்படுவதை புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த கால ஆட்சியில் செய்து முடிக்காத பல்வேறு திட்டங்களை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தி செய்து முடிப்பார்கள் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆனையூர் திருவாதவூர் மற்றும் உச்சப்பட்டி ஆகிய இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் 1712 குடும்பங்களை சார்ந்த 5505 குடும்ப உறுப்பினர்களுக்கு விலையில்லா கோப்-ஆப்-டெக்ஸ் ஆடைகள் ரூ.5945 776 இலட்சம் மதிப்பீட்டிலும் விலையில்லா சமையல் பாத்திரங்கள் ரூ.2199 920 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் எரிவாயு இணைப்பு மற்றும் மானிய விலை எரிவாயு உருளைகள் ரூ.5 12000 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.86 57 696 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் வழங்கினார்கள்.


இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகி பிரேமலா (மதுரை) , மதுரை வடக்கு வட்டாட்சியர் மாரிமுத்து, தனி வட்டாட்சியர் (மறுவாழ்வு முகாம்) கதிர்வேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

scroll to top