ஆதிதிராவிடர் நிலம் ஆக்கிரமிப்பு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Chennai_High_Court-scaled.jpg

அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தனி நபர்களாலும், அரசியல் கட்சியினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க உத்தரவிட வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள அய்யன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

scroll to top