அப்பர் ஆழியார் பள்ளம் பகுதியில் 15 ஆம் தேதி மாலை சுமார் 6.20 மணி அளவில் காடம்பாறை பிரிவு வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களால் பெண் காட்டு யானை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 16 ஆம் தேதி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜாவின் உத்திரவின் படி, இறந்த பெண் காட்டு யானையினை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் வே. செல்வம், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர், அட்டகட்டி பயிற்சி மையம், ஆ. மணிகண்டன் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர், இயற்கை ஆர்வலர்கள் முன்னிலையில் சுகுமார், வனக்கால்நடை மருத்துவ அலுவலர், விஜயராகவன், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மற்றும் கோவிந்தராஜ், வால்பாறை உதவி கால்நடை மருத்துவர் ஆகியோரால் இறந்த பெண் காட்டு யானையின் உடலினை உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த பெண் யானைக்கு சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் எனவும், ஆண் காட்டு யானையுடன் சண்டையிட்ட இரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டதன் காரணமாக பெண் காட்டு யானை இறந்துள்ளது என தெரியவந்தது. இறந்த பெண் காட்டு யானையை குழி தோண்டி புதைக்கபட்டது.
ஆண் காட்டு யானையுடன் சண்டையிட்டு பெண் யானை பரிதாப பலி
