உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பதிலும், முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் வழியில் செயல்பட்டு வருவதைக் கண்டு நாடே பாராட்டுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், தனது பிறந்தநாளையொட்டி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக மூத்த முன்னோடிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் நீங்கள் தயாராகி வருவதை அறிவேன். எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஆடம்பர ஏற்பாடுகளுக்கு செய்யும் செலவை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.