அவனியாபுரத்தில் குடிபோதையில் தகராறு வாலிபர் கைது

.jpg

அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி 49 .அதே பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் 40 . சசிகுமார் சம்பவத்தன்று குடிபோதையில் முனியாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் முனியாண்டியை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து முனியாண்டி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சசிகுமாரை  கைது செய்தனர்.

scroll to top