அலங்காநல்லூர் பகுதியில், பொதுமக்கள் குறைகளை கேட்ட எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம், சோழவந்தான சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி ஊராட்சியில், உள்ள மஞ்சமலை கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறுவதற்காக தனது பயணத்தை தொடங்கினார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன் பரந்தாமன், ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சு அழகு, துணைத் தலைவர் சங்கிதா மணிமாறன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, பழைய பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்திரி இதயச்சந்திரன், ஒன்றியக் கவுன்சிலர்கள் பவானி தனசேகர், தண்டலை சரவணன், பன்னை குடி தங்கத் துரை, தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணி வலையபட்டி சேகர் மாசாணம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, வளையபட்டி ஊராட்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தூய்மை காவலர்களுக்கு மலை கோர்ட்டுகளை வழங்கினார். இதில், ஊராட்சி செயலாளர் தெய்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top