வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா-2022-வை துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான, பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஆயிரக் கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.