அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ சாத்தவுராயன் கோவில் உற்சவ விழா – பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்

WhatsApp-Image-2023-05-25-at-12.19.40.jpg

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ செல்வ விநாயகர், சாத்தவுராயன், மாசான கருப்புசாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா நடைபெற்றது. நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் சாத்தவுராயன் சுவாமிக்கு பழக்கூடை வானவேடிக்கையிடன் பக்தர்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்றனர். பின்னர் சுவாமிக்கு பொங்கல் பானை அழைத்து செல்லுதல், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

scroll to top