அலங்காநல்லூர் அருகே வாங்கிய பணத்தை திரும்ப கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது

.jpg

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் பாலாஜி(43), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் காரணமாக மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் வருவது வழக்கம். அப்போது அலங்காநல்லூர் அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த வித்யா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின் அவ்வப்போது பணம் வழங்கி உதவி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து வித்யா, ராம் பாலாஜியை திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி பல லட்சம் ரூபாயை அவருக்கு கொடுத்து உதவியுள்ளார். பின்னர் இருவருக்கும் மனமுறிவு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் தற்போது ராம்பாலாஜி , வித்யாவிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது வித்யா கொலை மிரட்டல் விடுத்ததாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் ராம்பாலாஜி புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் வித்யா ஸ்ரீயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

scroll to top