அலங்காநல்லூர் அருகே முதலாம் ஆண்டு கபாடி போட்டி

WhatsApp-Image-2023-05-16-at-12.53.19-PM.jpeg

அலங்காநல்லூர் அருகே, வ.புதூர் கிராமத்தில், ஸ்ரீ மஞ்சமலையான் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முத்தரையர் உரையின் முறை சங்கம் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வ.புதூர் கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலையான் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முத்தரையர் உறவின்முறை சங்கம் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டியினை வலையபட்டி ஊராட்சி திமுக ஒன்றிய கவுன்சிலர் பவானி தனசேகரன், தலைமையில் அம்மாவாசை, மற்றும் புதூர்மயில், தொடங்கி வைத்தனர். இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கபாடி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

இந்த விளையாட்டில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மஞ்சமலையான் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் புதூர் முத்தரையர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்து திருந்தனர். இந்த விளையாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் கிராமத்தினர் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது..

scroll to top