மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளம் கிராமத்தில், மகளிர் காண இ .சேவை மையம் திறப்பு விழாவில், முன்னதாக மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாஸ் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூட்டமைப்பு த் தலைவர் ஹெலன் கீதா ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சு அழகு, ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஜான் ஜாக்லின், மாணிக்கவள்ளி, அபிநயா, முத்துச் செல்வி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், எட்டு சுய உதவி குழு பெண்களுக்கு கனரா வங்கி மூலம் ரூபாய் 76 லட்சம் எட்டு குலுக்களுக்கு வழங்கப்பட்டன . முடிவில், ஹில்டா மேரி நன்றி கூறினார்.
அலங்காநல்லூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான இ சேவை மையம் திறப்பு
