அலங்காநல்லூர் அருகே கூடாரவல்லி, பெருமாளுக்கு சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வெள்ளிமலை மேலுள்ள, வெங்கடாசலபதி ஸ்ரீதேவி பூமிதேவிக்கு, கூடாரவல்லி பூஜை நடைபெற்றது.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைணவ ஆலயங்களில், பெருமாளுக்கு திருமஞ்சணம் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரை மேலமடை தாசில்தார் நகர், சித்தி விநாயகர், சௌபாக்யா விநாயகர் ஆலயங்களில், லட்சுமி நாராயணருக்கு, பக்தர்களால் சிறப்பு திருமஞ்சணம் நடத்தப்பட்டது.

scroll to top