அலங்காநல்லூர் அருகே குடிநீர் வேண்டி சாலை மறியல்

WhatsApp-Image-2023-03-24-at-6.07.38-PM.jpeg

மதுரை, அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் வேண்டி அலங்காநல்லூர் தனிச்சியம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் இரண்டு நாட்கள் அப்பகுதிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்றும், இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், துணைத் தலைவர் மெர்லின் குமாரி, ஊராட்சி செயலாளர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மின்சாரத்தை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என, உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.. பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

scroll to top