அலங்காநல்லூரில், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி, கம்யூ. கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசீய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி, அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக அரசு, ஆலையை இயக்க போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும், உபமின் நிலையத்தில், மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

scroll to top