மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தில் சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ. தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 153 பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, சமூக நல விரிவாக்க அலுவலர் பானுமதி, மகளிர் ஊர் நல அலுவலர் மீனாட்சி, ஆரோக்கியமா, ஒன்றியக் கவுன்சிலர்கள் கல்லணை சுப்பராயலு, சரவணன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தையன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, யூனியன் முக்கிய சேவிகா பானுமதி, கடச்சநேந்தல் கேசவன், பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு நபருக்கு 8 கிராம் தங்கம் வீதம் 153 பயனாளிகள் அலங்கார ஒன்றிய அளவில் பயன்பெற்றனர்.