அலங்காநல்லூரில் இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடையில் பணத்தை திருடி செல்லும் வாலிபர், சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை பாட்ஷா என்பவர் நடத்தி வரும் நிலையில்,
அங்கே இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர் ஒருவர் உதிரிபாகங்கள் வாங்குவதுபோல கடை உரிமையாளரான பாட்ஷாவிடம் பேச்சு கொடுத்து அவரை திசைதிருப்பினார்,
கடை உரிமையாளரான பாட்ஷா வெளியே சென்று மீண்டும் கடைக்கு திரும்புவதற்குள்
அந்த வாலிபர் கடைக்குள் புகுந்து கல்லாபெட்டியிலிருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எதுவும் தெரியாததுபோல் வாலிபர் அங்கிருந்து செல்லும் பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருடிய வாலிபரை அலங்காநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

scroll to top