அலங்காநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படம் மர்ம நபர்களால் கிழிப்பு

WhatsApp-Image-2023-05-01-at-12.37.21.jpg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அலுவலகம் உள்ளது அதன் அருகில் கடந்த வாரம் பொதுமக்களின் தாகம் தீர்க்க தனது சொந்த செலவில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் மற்றும் பல வகைகள் வழங்கப்பட்டு வருகிறது

இந்த நீர்மோர் பந்தலில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மாவட்டச் செயலாளரும் திருமங்கலத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜ், உள்ளிட்டோர் படங்கள் அச்சடிக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் அந்த நீர் மோர் பந்தலில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு இந்த டிஜிட்டல் பேனரில், இருந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடிபழனிச்சாமி, அவரின் படம் மட்டும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதாக கூறி, அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் அழகுராஜ், தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் சென்று புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு ப் பதிவு செய்வதாக கூறினார். அலங்காநல்லூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, உருவபடம் கிழிக்கப்பட்டதால், அதிமுகவினருடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top