அருப்புக்கோட்டை அருகே, நாய்கள் கடித்து புள்ளி மான் பரிதாப பலி:

Pi7_Image_WhatsAppImage2022-07-25at11.14.58AM.jpeg

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள குல்லூர்சந்தை பகுதியில், புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், வனச்சரக அலுவலர் கோவிந்தன், வனக்காப்பாளர் ஜெயசந்திரன், வேட்டை தடுப்புக்காவலர் ராஜேந்திரபிரபு உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று புள்ளி மான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதிகாரிகள் விசாரணையில், தண்ணீர் தேடிவந்த புள்ளி மானை, அந்தப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் விரட்டி கடித்ததால், புள்ளி மான் இறந்தது தெரிய வந்தது. பாலவநத்தம் கால்நடை மருந்தக உதவி கால்நடை மருத்துவர் சரவணன் தலைமையில் புள்ளி மான் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அந்தப்பகுதியில் இருந்த காப்புக்காடு பகுதியில் புதைக்கப்பட்டது.

scroll to top