மதுபானம் குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து கோவையில் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் , “இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிவிட்டு திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது. இதற்கு டோர் டெலிவரி செய்யலாம். இது ஏமாற்று விஷயம். இது ஒரு சமூக சீரழிவை ஏற்படுத்தும் மக்களை சீரழிவை நோக்கி இழுத்து செல்லும் முயற்சியை அரசு செய்து வருகிறது. இந்த விதிவிலக்கு மற்றும் சட்ட திருத்தம் என்பதை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும். இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.
அரசே மதுவை டோர் டெலிவரி செய்யலாம் – கோவையில் வானதி சீனிவாசன் காட்டம்
