அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து-7 பேர் காயம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அப்போது அந்த பஸ், சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.  லாரி மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top