தமிழக பள்ளிக்கல்வித்துறைசார்பில், பள்ளிகளில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் 58 மாணவர்கள், 5 ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துபாய்-க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறார்.
அரசு பள்ளிகளைச் சேர்ந்த 58 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்.
