அரசு தொழிற்பயிற்சி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-ம் ஆண்டிற்கான ( மகளீர் ) உடனடி சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, டிச. 31..ம் தேதி வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது, பயிற்சி பெறும் பெண்களுக்கு, பயிற்சிக் கட்டணம் கிடையாது. மேலும், சீருடைகள், மூடு காலனிகள், வரைபடக் கருவிகள், பேரூந்து சலுகை, மடிக் கணிணி, மிதி வண்டி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ரூ. 750 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பதிவுக் கட்டணம் ரூ. 50. மேலும் விபரங்களுக்கு, 8248907516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

scroll to top