அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும் அரசின் சி, டி, பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

scroll to top