அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு

camera.jpg

2100 பேருந்துகளில் சிசிடிவி காமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முன்னோட்டமாக கடந்த அதிமுக ஆட்சியின்போது, சென்னையில் 21ஜி, 18பி, 23சி, 29சி உள்ளிட்ட வழித்தடங்களில் சில பேருந்துகளில் பொருத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி காமிரா பொருத்தும் பணிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. இதற்கான நிதி நிர்பயா திட்டத்தின்கீழ் மத்தியஅரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கண்ணப்பன், நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் 2100 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,  இந்த கேமராக்களை இணைத்து ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் பல்லவன் இல்லத்தில் சிறப்பு மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றும்,  ஒரு பேருந்தில் 3 இடங்களில் கேமராக்களும் நான்கு பானிக் பட்டன்களும் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

scroll to top