நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சித் தலைவர்களும் விறுவிறுப்பாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பல வேட்பாளர்கள் நூதனமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் 98வது வார்டு திமுக வேட்பாளர் சுவிதா என்பவர் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, அவருடைய ஐந்து வயது மகள் ரக்ஷிதா வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும், ஒலிபெருக்கியில் தனது அம்மா சுவிதாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தன் மழலை மொழியில் பேசியது அந்த பகுதியில் வியப்பில் ஆழ்த்தியது.