அமைச்சர் பிறந்தநாள்- காரியாபட்டியில் நலத்திட்ட உதவி

WhatsApp-Image-2023-04-11-at-3.00.49-PM.jpeg

காரியாபட்டி நகர தி.மு.க சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகர தி.மு.க சார்பாக, திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வும், தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பிறந்தநாளை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் மற்றும் உள்நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களும், திமுக நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எஸ்.பி.எம்.அழகர்சாமி, கவுன்சிலர்கள் முனிஸ்வரி, சங்கரேஸ்வரன், தீபா, சரஸ்வதி, முத்துக்குமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

scroll to top