அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு போராட்டம்

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மது மற்றும் ஆயத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. இவர் மீது ஏற்கனவே, கடந்த ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் இருந்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கண்டம் தெரிவித்த அவர்கள், பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா..?, முதலமைச்சர் அவர்களே இதை நம்பி வாழும் 3 லட்சம் தொழிலாளர் குடும்பங்களை காப்பாற்றுங்கள், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

scroll to top