அமெரிக்கா: கொரோனாவால் 6 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் மீண்டும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா தொற்றின் தினசரி பாதிப்புகள் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், உலகில் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடான அமெரிக்காவில் 2019 முதல் இதுவரை 6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8,37,594 பேர் பலியானதாகவும் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் , கடந்த 24 நாள்களில் மட்டும் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் , ஒமைக்ரான் அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில் நாளொன்றின் சராசரி கொரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

scroll to top