அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ முனியாண்டி கோவிலில் ஒன்றியச் செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையிலும் நகரச் செயலாளர் ராஜபிரபு முன்னிலையிலும் மாலை அணிவித்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சை, இளைஞரணி சந்திரசேகரன், ஊராட்சிக் கழக செயலாளர்கள் வேல்முருகன், மோகன், ராஜா,மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி, வட்டச்செயலாளர் சுந்தரபாண்டியன்,
நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top