அன்னையர் தின சிறப்பு: கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திரா

168403065_1106006360078446_7234662253953548988_n.jpg

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக விளங்கும் மஹிந்திரா குரூப் நிறுவன தலைவராக ஆனந்த் மகிந்திராஇருந்து வருகிறார். இவர் பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து வருவதுடன், கலை, கலாச்சாரம், மொழி உள்பட சமூக சேவைகளிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். இவர், தற்போது ஏழ்மையில் இட்லி செய்து வியாபாரம் நடத்தி காலத்தை ஓட்டி வந்த கோவை இட்லி பாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடு, அன்னையர் தினமான நேற்று (ஏப்ரல் 8ந்தேதி), அன்னையர்களை கவுரவப்படுத்தி உள்ளதுடன், தனது தாராள குணத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கோவை கமலாத்தாள்  இட்லி பாட்டி குறித்த தகவல் அறிந்து அவருக்கு பல உதவிகளை செய்து வந்தவர், அவரது ஆசை மற்றும் கோரிக்கையை ஏற்று, மூன்று மாதத்தில் அழகிய வீடு கட்டிக்கொடுத்து, அன்னையர் தினத்தில் அவர் மூலமே வீட்டை திறக்கவைத்து கவுரவப்படுத்தியுள்ளார் ஆனந்த் மஹேந்த்ரா.

கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (85). இவர்,  கடந்த 30 வருடங்களாக விற்பனை செய்து வருகிறார். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற் காலையிலேயே தயார் செய்து விற்று வருகிறார். இவரது இந்த கை பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் வந்து செல்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையை கூட்டி உள்ளார். தற்போது ஒரு இட்லி விலை ரூ.1 மட்டுமே. இட்லி சமைக்க காஸ் அடுப்பு கிடையாது. மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது. சட்னி அரைக்க மிக்ஸி கிடையாது. எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும் தான். ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா கடந்த 2 ஆண்டுக்கு முன், அவரை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கி அவரது சேவைக்கு உதவி செய்தார். இத்துடன், அரசின் எரிவாயு நிறுவனங்களும் மாதம் 3 சிலிண்டர்களை வழங்கி வருகிறது.

scroll to top