மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் கடந்த திங்கள் முதல் முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பரிசாக தரமற்ற பொருட்களை அரசாங்கம் வழங்கி வருவதாகவும், ரொக்கப்பரிசு எதுவும் வழங்கவில்லை என்றும் அதிமுகவினர் குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.
இதன் காரணமாக, மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.