அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளிய 3 டிப்பர் லாரி, 2 ஜேசிபி பறிமுதல்

WhatsApp-Image-2022-02-02-at-11.14.23.jpeg
மதுரை மாவட்டம் மேலூர் அருகே  ஆலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில்  திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கீழவளவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கீழவளவு காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சென்ற பார்த்த பொழுது அங்கு திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதுதொடர்பாக கண்மாய் பகுதியில் மண் அள்ளிக்கொண்டிருந்த இரண்டு ஜேசிபி வாகனம், 3 டிப்பர் லாரி உள்பட 5 வாகனத்தை கீழவளவு காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜேசிபி வாகன உரிமையாளர்களான அட்டபட்டி சேர்ந்த குமார், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், நாயக்கன்பட்டி சேர்ந்த நாகராஜ் மற்றும் ஓட்டுநர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்...
scroll to top