அதிர வைக்கும் கோவை திமுக கோஷ்டி அரசியல்! மாநகராட்சித் தேர்தலிலும் எதிரொலிக்குமா?

fgfg.png

-சபா கமலக்கண்ணன்

ஒரு தேர்தலில் குறிப்பிட்ட கட்சியை வெற்றி பெற வைப்பது கட்சியின்செல்வாக்கா? பண மற்றும் அதிகார பலமா? என்று கேட்டால்இவை எல்லாமேதான் என்றே சொல்லுவோம்.  அப்படியே இந்த மூன்றும் இருந்தாலும் தோற்றுப் போகிற கட்சிகளைஎன்னவென்று சொல்லுவது?  நிச்சயம் உட்கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல்தான் என்பதைமற்றவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு கட்சிக்குள்ளும்பழந்தின்று கொட்டை போட்ட ஆட்கள் சொல்லி விடுவார்கள். குறிப்பாக ஒவ்வொரு தேர்தல்களுக்குப்பின்னா லும் தோற்றுப் போன கட்சி தன் தோல்விக்கு என்ன காரணம் என்பதை பகுத்து ஆராயும்போது, ஆய்வுக் கூட்டங்கள்நடத்தும் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வந்து குவிவது இந்த கோஷ்டிகள்பற்றிய புகார்கள் தான்.  கடந்த சட்டமன்றத்தேர்தலில் கோவை மண்டலத்தில் திமுக படுதோல்வி அடைந் ததற்குவாசிக்கப்பட்ட புகார் பட்டியலே இந்த கோஷ்டிகள் பற்றித்தான். வரப்போகும் மாமன்றத் தேர்தலில் கூட இதே கோஷ்டி கானம் தான் எங்கள் கட்சியில் ஒலிக்கப்போகிறது!’ என்று நீக்கமற சொல்கிறார்கள் திமுகவினர். சரி, இவர்கள் கட்சியில் மட்டும்தானா கோஷ்டி கானம். அதிமுகவில் இல்லையா? என்று கேட்டால், அது ஒரு காலத்தில்இருந்தது. இப்போது சுத்தமாக இல்லை.  குறிப்பாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்கை அதிமுகவில் எப்போது ஓங்கியதோ அப்போதே கோவை அதிமுகவில் இந்த கோஷ்டி கானத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால் திமுகவில்தான் கோஷ்டிகள் நாளொரு பொழுதும்,பொழுதொரு வண்ணமுமாகவளர்ந்து கொண்டே இருக்கிறது!’’ என கவலை தெரிவிக்கிறார்கள் அதே திமுகவினர்.  எப்படி? அதைப் பற்றி நிறைய பகிர்ந்து கொண்டனர் மூத்த திமுக பிரமுகர்கள்.  அதை இங்கே சுருக்கமாக தருகிறோம். கோவை திமுகவைப் பொறுத்தவரை அதிமுக உருவான காலத்திலிருந்தேஅணி அரசியல் இலைமறைவு காய் மறைவாக எதிரொலித்து தான் வந்திருக்கிறது.  ஆனால் முந்தைய காலத்தில் அது எந்த இடத்திலும் தேர்தலில் வெற்றிதோல்வியைப் பாதித்தில்லை. மு.கண் ணப்பன், சாதிக்பாட்சா போன்றவர்கள்அமைச்சர் களாக இருந்த காலத்திலும் சரி, மு.ராமநாதன், சி.டி. தண்டபாணி, இரா.மோகன், ஏ.டி.குலசேகர், பேரூர் நடராஜன்ஆகியோர் எம்.எல்.ஏ, எம்.பிக்களாக இருந்த காலத்திலும் சரி அப்படித்தான் இருந்தது. உதாரணமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உக்கிரமாக கலந்துகொண்ட மு. ராமநாதனை எடுத்துக் கொண்டால் சிறந்த பேச்சாளராக அடை யாளம் காணப்பட்டு கலை ஞரால்கோவைத் தென்றல் என்றே வர்ணிக்கப்பட்டார். சி.டி. தண்டபாணி சிறந்த செயல்வீரராக கருதப்பட்டுநிரந்தர கோவை நகர செயலாளராகவே வலம் வந்தார். பேரூர் நடராஜன் சிறந்த தொழிற்சங்கவாதி.மக்களால் எளிமையின் திருவுருவமாகவே போற்றப்ப ட்டார்.  இவர்களுக்கென்று கட்சிக்குள் தனித்தனியே தொண்டர்களின் ஆதரவுபலம் இருந்தாலும், அவர்கள் எல்லாம் தேர்தல் காலங்களில் கட்சி என்ற அடிப்படையில்யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காகவே அப்பழுக்கில்லாமல்  பாடுபட்டனர். திமுகவிலி ருந்து வைகோ பிரிந்து சென்றபிறகு, கலைஞரின் பாசத்திற்குரிய காரோட்டி கண்ணப்பன் தலைமையில் கட்சி முக்கிய நிர்வாகிகள்எல்லாம் வை.கோவுடன் செல்ல அப்போது கட்சிக்குள் நான்கு, ஐந்தாம் இடத்தில்இருந்த பொங்கலூர் பழனிசாமி மாவட்ட செயலாளர் ஆகி, 1996-ல் சிங்காநல்லூர்எம்.எல்.ஏவாகி, மந்திரியுமாகி முக்கியத்துவம் பெற்றார்.  அப்போதே சி.டி.டிக்கும் இவருக்கும் நேரடியான முட்டல் மோதல்துவங்கியது. தொண்டர்கள் யாவரும் சிடிடி அணி, பொங்கலூரார்அணி என இரண்டாக பிரிந்து நின்றனர். வீரகோபாலை சி.டி.டி வளர்த்து விட்டார். துணைமேயர்கார்த்தியை பொங்கலூரார் வளர்த்து விட்டார். இந்த இருவேறு அணிகளிலும் மு.ராமநாதன் மாறி, மாறி வலம் வந்தார். நாச்சிமுத்து, மீனா லோகு, மீன்கடை சிவா, வே.நா.உதயக்குமார்இப்படி முன்னாள் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் வெவ்வேறுஅணிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது ஆனது. இது தேர்தல் காலங்களிலும் எதிரொலித்தது.ஒருவரை மற்றவர் காலை வாரி விடும் போக்கும் அதிகரித்தது. இது சட்டமன்ற, பாராளுமன்ற, மாநகர் மன்றத்தேர்தல்களிலும் எதிரொலித்தது.  இதில் மனம் நொந்து போய், சி.டி. டி, பொங்கலூராரைநேரடியாகப் பேசி சமாதானப்படுத்தும் முயற்சிகள் கூட நடந்தது வரலாறு.  சி.டி.டி மறைவுக்குப் பிறகு அவரின் ஆதரவாளரான வீரகோபால் பகிரங்கமாகவேபொங்க லூராருக்கு எதிர் அணி சேர்த்து செயல்பட, பொங்கலூரார்அணியில் முன்னாள் துணைமேயர் 2016-ல் தனி பலம் பெற்று சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏவும் ஆனார்.  ஆனால் இவரை உருவாக்கின பொங்கலூராரோ அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில்எம்.பி., எம்.எல்.ஏ வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி யைத் தழுவ, அவர் செல்வாக்குபடிப்படியாக சரியத்துவங்கியது.  கட்சித் தலைமையும் கோவையில் 2001 முதலே நமக்கு நடந்து வரும்படுதோல்விக்கு முக்கிய காரணமே கோஷ்டிகள்தான் என்று முடிவு செய்து அவர்களை எல்லாம் சமாதானம்செய்யும் முகமாகவோ, கட்சியில் உள்ள அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முகமாகவோ மாநகரம், மாவட்டம் இரண்டாகஇருந்த கட்சி மாவட்டங்களை கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர்மேற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு என பிரித்து அவற்றிற்கு கார்த்தி, நாச்சிமுத்து, சி.ஆர்.ராமச்சந்திரன், தென்றல் செல்வராஜ்போன்றவர்களை மாவட்ட செயலாளர்கள் ஆக்கியது.  அதன் மூலம் ஏற்கனவே கோவை திமுகவில் நிர்வாகிகளாக வலம் வந்தபொங்கலூரார், மேட்டுப்பாளையம் அருண்குமார், பொள்ளாச்சிதமிழ்மணி போன்றவர்களுக்கான அரசியல் வெளிச்சம் மங்க ஆரம்பித்தது. என்றாலும் தேர்தல்காலங்களில் இந்த கோஷ்டிகளின் செயல்பாடு அந்தந்த பகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின்வெற்றிக்கு குந்தகம் விளைவிக்க ஆரம்பித்தது.  அது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறது.மாவட்டத்தில் பத்துக்குப் பத்து தொகுதிகளின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று உட்கட்சிக்குள்கடுமையான கருத்து மோதல்களும் நடந்திருக்கின்றன.  அதன் எதிரொலியாகவே இந்த தேர்தலுக்குப் பின்பு கோவை மாவட்டதிமுக நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டு பையாக் கவுண்டர், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன்என பொறுப்புக்கு வந்துள்ளனர். இப்போது புதிதாக வந்துள்ள வர்களுக்கு ஏற்பவும் கோஷ்டிகள்உருமாற்றம் கண்டுள்ளன. வரும் மாநக ராட்சித் தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும் என்றேசொல்கின்றனர் கட்சியின் முன்னோடி கள். கோவையில் கட்சி யின் பெரிய பலவீனம் இந்த கோஷ்டிகள் தான் என்பதை தற்போதைய கோவைபொறுப்பு அமை ச்சரான செந்தில் பாலாஜி உணர்ந்தே உள்ளார். சமீபத்தில் அவர் நடத்திய மக்கள்சபை கூட்டங்களில் கூட மறைமுகமாக இந்த கோஷ்டி கானம் ஒலிக்க கண்டேயிருக்கிறார். அது எவ்வகையிலும் மாநகராட்சித் தேர்தலில் ஒலிக்கலாகாது என்பதையும் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஒருவேளை இந்த எச்சரிக் கையை தாண்டி தேர்தலில் உள்ளடிகள் நடந் தால் காரணமானவர்கள் மீது நடவடிக்கை கடுமையாகவே இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். தவிர இந்த முறை மாநகராட்சிவார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் 90 சதவீதம் புதியவர்களுக்கே வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.அப்படி மட்டும் நடந்தால் மூலைக்கு மூலை புற்றீசல் போல் பறக்கத்துடிக்கும் கோஷ்டிகள்என்ன செய்யும் என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண் டும்’’ என்றார் நம்மிடம் பேசியதிமுக கட்சிக்காரர் ஒருவர். அவரே மேலும் பேசும்போது, அதிமுகவிலும் ஒரு காலத்தில் கோஷ்டிகள் இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்தில் இருந்த மந்திரிகள் அரங்கநாயகம், குழந்தைவேலுபோன்றோர் இப்படி கோஷ்டிகள் இல்லாம லே நாகரீக அரசியல் செய் தனர். 1991 ஜெயலலிதா வருகைக்குப்பிறகு கே.எஸ்.துரைமுருகன் , கே.பி.ராஜூ, மலரவன் , செ.ம.வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ப.வே.தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், அம்மன் கே.அர்ஜூன், சண்முகவேலு, திருப்பூர்சிவசாமி, ஜான்… இப்படி நிறைய கோஷ்டிகள் உருவாகித்தான் இருந்தது. இவை தேர்தலுக்குத் தேர்தல் எதிர் கோஷ்டி வேட் பாளர்களை காலி செய்யும் வேலைகளை கனகச்சிதமாக செய்யவும் செய்தது.சசிகலா, தினகரன்  கட்சியை விட்டு நீங்கி, இபிஎஸ், ஓபிஎஸ் கைக்குகட்சி வந்த பிறகு கோவையை மட்டுமல்ல, கோவை மண்டலத்தையே தன்உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவர் போடும்ஆட்கள்தான் எம்.எல்.ஏ., வேட்பாளர், மாமன்ற கவுன்சிலர் என்றுஆகி நீண்டகாலம் ஆகி விட்டது. அதனால் அங்கே கோஷ்டிகளால் தோல்வியில்லை; கோஷ்டிகளே இல்லைஎன்ற நிலை உருவாகி விட்டது. அந்த நிலை திமுகவிலும் உருவானால்தான் நாங்கள் நிம்மதியாகஒரு வார்டு எலக்சனில் கூட நிற்க முடியும்!’’ என்றும் தெரிவித்தார்.

scroll to top