அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்

eps1-1.jpg

​அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்   ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு கட்சி தலைமை பதவிக்கு மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு  ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுக  பொதுச்செயலாளரை  கட்சி விதிப்படி தேர்ந்தெடுக்கும் தேர்தல் மார்ச்  26-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கிய போது முதல் ஆளாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுவை  தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

scroll to top