அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம்

WhatsApp-Image-2023-05-17-at-10.02.27-AM.jpeg

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பிரிவில் மதுரை மேற்கு (தெற்கு ) ஒன்றியம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரும் திருமங்கலம் தொகுதி தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு அன்னதானத்தினை வழங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் அவர் பேசியது அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு, பிறகு கட்டிக் காத்து வரும் சேலத்து சிங்கம் கொங்கு நாட்டு தங்கம் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த திமுக ஆட்சியில் சாராய விற்பனை அமோகமாக உள்ளது விழுப்புரம் அருகே கள்ளசாராயம் குடித்த 15க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாக தகவல் வந்து கொண்டே உள்ளது இந்த திமுக ஆட்சியின் லட்சணம் இதுதான் கள்ளசாராயம் குடித்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரையும் நேரில் பார்த்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளார் ஆனால் இறந்தவர்களின் உயிரை முதலமைச்சர் ஸ்டாலினால் திருப்பித் தர முடியுமா பணம் கொடுத்தால் அவர்கள் உயிர் திருப்பி வந்துவிடுமா இறந்தவர்களின குடும்பத்தினர் படும் துயரம் அவருக்குத் தெரியுமா என்றார்

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா, பான்பராக், புகையிலை, உள்ளிட்டவைகளால் அனைத்து இடங்களிலும் ரவுடிகள் அட்டூழியமும் அப்பாவி மக்களின் உயிரிழப்பும் அன்றாட நடைபெற்று கொண்டு இருக்கின்ற ஒன்றாக உள்ளது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறை அரசுக்கு பயந்து கைகட்டி வேடிக்கை பார்க்கிறது இதுபோன்று தொடர்ந்து நடந்தால் அதிமுகவினர் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்று கூறினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளும் அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அம்மா பேரவை வெற்றிவேல், பொதும்பு கூட்டுறவு வங்கி தலைவர் மலர்கண்ணன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ராகுல், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதாராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், சிறுவாலை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள்ராஜு, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் காளிதாஸ், நகர செயலாளர் அசோக்குமார், புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி, நகர மாவட்ட பிரதிநிதி கேட்டுகடைமுரளி, மற்றும் பாலன், தகவல் தொழில்நுட்ப அணி தண்டலை ஆனந்த், உள்பட தங்கமுருகன், ஹரிஹரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top