மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அழகர் கோவில் மலை மேல் அமர்ந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவிலில், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில், நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
முன்னதாக, முருகன் கோவில் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மலைக்கு கீழே அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, எஸ்.எஸ்.சரவணன் உசிலம்பட்டி நீதிபதி, டாக்டர் சரவணன், அம்மா பேரவை நிர்வாகி வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், மேலூர் பொன்னுச்சாமி, வாடிப்பட்டி கொரியர் கணேசன், காளிதாஸ், திருமங்கலம் மகாலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பஞ்சவர்ணம் மற்றும் மாவட்ட பிரதிநிதி கேட்டுகடை முரளி, மனோகரன், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் சண்முக பாண்டியராஜா மற்றும் துரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழகர் கோவிலுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு, அதிமுக நிர்வாகிகள் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது..