அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

edappadi.jpg

​அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேரம் 19ம் தேதியோடு முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்து இருந்தார். தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக  பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் இருவரும் அறிவித்தார்கள்.

scroll to top