அதிமுக சசிகலா தலைமையில் இயங்க வேண்டும் என அதிமுகவில் ஒருதரப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்பட அதிமுக மகளிர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் – ஈபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சசிகலா பிரச்சினை அதிமுகவில் எழுந்தபின் முதன்முறையாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். மகளிர் தினத்தையொட்டி நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் கேக் வெட்டப்பட்டது. மேலும் விதவைகளுக்கு தையல் எந்திரம், பழ வியாபாரம் செய்வதற்கு நிதி உதவி, மதிய உணவு 1,500 பேருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இபிஎஸ் ஆலோசனை நடத்தினர். அப்போது, மார்ச் இறுதியில் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
