அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகையில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் தலைமையில் இன்று காலை முதல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான தமிழ்மகன் உசேன் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக செயற்குழுவால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியது முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர் தமிழ்மகன் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top