அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிப்பு; ஓபிஎஸ், இபிஎஸ்

அதிமுக.,வின் தலைமை பதவிகளான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று விதிமுறை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சூடு ஆறுவதற்குள் டிச.,7 ம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நடக்கும் என அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமியும் காட்டும் வேகம், கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்சி அமைப்புகளின் பொதுத்தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிச., 7 காலை 10:00 மாலை 5:00 மணி வரை நடக்கும்.
இதற்காக வேட்பு மனு தாக்கல் டிச.,3ல் துவங்கி டிச.,4 பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெறும்டிச.,5 காட, 11.25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடக்கும். டிச.,6ல் வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம் எனவும், டிச.,8 ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

scroll to top