அதிமுக அலுவலகத்திற்கு எம்ஜிஆர் பெயர்

Tamil_News_large_2896094.jpg

அதிமுக, தலைமை அலுவலக கட்டடத்திற்கு, அக்கட்சி நிறுவனர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, அக்கட்சி நிறுவனர் எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தினர். அக்கட்சியின் அமைப்பு செயலர்பிரபாகரும், நிர்வாகிகள் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, கட்சி தலைமை அலுவலக கட்டடத்திற்கு, எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது.அதன்படி தற்போது அலுவலக கட்டடத்திற்கு, எம்.ஜிஆர் மாளிகை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முகப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

scroll to top