அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது

IMG-20220411-WA0000.jpg

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து , அண்ணா தொழிற்சங்கம் சார்பாக சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் பப்பாளி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். அண்ணா தொழிற்சங்க தலைவர் சின்னன், செயலாளர் பாண்டி, பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மகாலிங்கம், சக்திவேல் , மதன்குமார், சிவா ,கலையரசன், மற்றும் கணேசன் பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

scroll to top