உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தனக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை பட்டியல் வெளியிட்டுள்ளதையடுத்து, 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்புக் கேட்க தவறினால் அண்ணாமலை ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தர விடக்கோரி வழக்கு தொடரப்படும் வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.